Tuesday, July 29, 2008

தலையங்கம் செய்தி மலர் ஆகஸ்ட்

இந்தியா பல்வேறு காரணங்களுக்காக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. அமைதி, ஆன்மிகம், மதம், வாழ்க்கை நெறிமுறைகள், பாரம்பரியம் என பல்வேறு காரணங்களுக்காக பலராலும் மதிக்கப்படுகிறது. மற்றுமொரு ஆச்சர்யமான செய்தி என்னவெனில் மனித உறவுகளுக்கும இந்தியா பெயர் பெற்றிருக்கிறது. ஆச்சர்யம் ஆனால் அது உண்மை. அதுதான் உலக விவாகரத்து விகிதத்தில் இந்தியாவின் பங்கு ௧.௧ பெற்று இறுதி நிலை வகிப்பது.

விவாகரத்து அதிகம் செய்யும் நாடுகளில் சுவீடன் நாடு முதலிடம் வகிக்கிறது. உலக விவாகரத்தில் சுவீடன் ௫௪.௯ சதவிகித விவாகரத்து ச்வீடேனில் நடக்கிறது. மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைந்த விவாகரத்து நடை பெறுகிறது. வெறும் ௧.௧ சதவிகிதம் மட்டுமே.

இதற்கு பல்வேறு காரங்கள் உண்டு. ஒன்று, இந்திய பழமையையும் பாரம்பரியத்தையும் போற்றுகிற ஒரு நாடு. மற்றொன்று, திருமணம் பந்தம் நீடித்த மற்றும் நிலையான உறவு என மக்கள் ஆழமாக கருதுவதால்தான்.

விவாகரத்து விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைவாக உள்ளதென்பது நமது உறவுகளின் மீது நாம் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தியாவில் நடக்கும் ஆயிரம் திருமனன்ன்களில் ௧௧ திருமணங்கள் மட்டுமே விவகாரத்தில் முடிகின்றன. அதாவது நூற்றுக்கு ஒரு திருமணம் மட்டுமே விவாகரத்தில் முடிகிறது. இதற்குமுந்தைய கணக்கெடுப்பின்படி ஆயிரத்தில் ௭.௪0 திருமணங்கள் மட்டுமே விவாகரத்தில் முடிந்தன.

No comments: