Wednesday, July 30, 2008

வத்திகான் செய்திகள்

இளையோர்தினம் நம்பிக்கை அழிக்கிறது : திருத்தந்தை
1986 -ன்உலக இளையோர் தினத்தை தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இளையோர் ஒன்றுகூடி கிறிஸ்துவின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தவும், அவரைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறார்கள் என சிலுவை வடிவில் நின்று கொண்டு தனது உரையை கேட்டுக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா கடற்படை, தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்களிடம் திருத்தந்தை கூறினார்.
அங்கு புனிதப்பயனதிர்க்காக வந்திருந்தவர்கள் இறைவார்த்தையை கேட்க ஆவல் கொள்பவர்கள் திரும்பிச்செல்லும்போது தங்கள் மனதைத்தொட்ட உயர்ந்த இலட்சியங்களைக்கொண்ட நிகழ்வுகளில் பங்கெடுப்பவர்கள் தனது செய்தியால் பழங்குடியின மக்களோடு நல்ல உறவை வளர்க்க முயல்வதற்காக திருத்தந்தை ஆஸ்திரேலியா அரசைப்பாராட்டினர்.

வத்திகான் செய்திகள்

மீண்டும் தோண்டியெடுக்கப்படும் கர்தினால் நியூமன்னுடைய உடல்
பக்தர்களுடைய வழிபாட்டை எளிதாக்குவதற்க்காக வணக்கத்திற்குரிய ஹென்றி நியூமன்னுடைய உடலை மீண்டும் தோண்டிஎடுக்குமாறு இங்கிலாந்து திருச்சபைக்கு வத்திகான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்து திருச்சபையிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனமாறிய ஹென்றி நியூமன்னுடைய அருளாளர் பட்டம் அருகில் வரவிருப்பதால் இதற்கு திருச்சபை ஏற்பாடு செய்துள்ளது. நியூமன்னுடைய உடல் ரேட்னால் என்ற இடத்தில் 1890 - இல் புதைக்கப்பட்டது. தி டெலிகிராப் கொடுத்த தகவலின்படி, ஹென்றி நியூமன்னுடைய உடல் பர்மிங்ஹாம் ஆரட்டரியிலுள்ள அழகிய பளிங்கு கற்களால் ஆனகட்டிடத்தில் வைக்கப்போவதாக கூறப்படுகிறது. தனது மனமாற்றத்திற்கு பிறகு, பர்மிங்ஹாம் ஆரட்டரியை நிறுவினார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ பதினைந்தாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

உலக இளையோர் தின திருப்பலி
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத கூட்டம்
உலக இளையோர் தின விழாவின் (15 - 20 ) இறுதி திருப்பலியானது, எண்ணிலடங்கா குறிப்பிடத்தக்க சிறப்புகளை உள்ளடக்கி நிறைவுற்றது. ஆரம்பம் முதல் இறுதி வரை அதன் சிறப்பு என்னவென்றால், ஆஸ்ற்றலியாவரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு மக்கள் திரளாக வந்திருந்தனர்.
இந்தத்திருப்பலியானது, ஆஸ்திரேலியா வரலாற்றில் சிறந்த மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்திருப்பளியில் 26 கர்தினால்களும், 420 ஆயர்களும், ஆயிரத்திற்கும் மேலான குருக்கள் மற்றும் துறவற சபையினரும் கலந்துகொண்டனர்.
மற்றுமொரு வியத்தகு சம்பவம் என்னவென்றால், இந்நிகழ்ச்சியில் 24 உறுதி பூசுதல் வழங்கப்பட்டது. இதில், 14 ஆஸ்திரேலியர்கள் மற்றும் அமெரிக்காவிலிருந்து யுவான் மர்த்தினசும் அடங்குவர். மேலும், 1300 குருக்கள் மற்றும் சகோதரர்கள் கலந்து கொண்ட இத்திருப்பளியின்போது இயேசுவின் திருவுடல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தலையங்கம் சலேசியன்


Thalaiyangam
இந்தியா பல்வேறு காரணங்களுக்காக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. அமைதி, ஆன்மிகம், மதம், வாழ்க்கை நெறிமுறைகள், பாரம்பரியம் என பல்வேறு காரணங்களுக்காக பலராலும் மதிக்கப்படுகிறது. மற்றுமொரு ஆச்சர்யமான செய்தி என்னவெனில் மனித உறவுகளுக்கும இந்தியா பெயர் பெற்றிருக்கிறது. ஆச்சர்யம் ஆனால் அது உண்மை. உலக விவாகரத்து விகிதத்தில்
விவாகரத்து அதிகம் செய்யும் நாடுகளில் சுவீடன் நாடு முதலிடம் வகிக்கிறது. உலக விவாகரத்தில் ௫௪.௯ சதவிகித விவாகரத்து ச்வீடேனில் நடக்கிறது. மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைந்த விவாகரத்து நடை பெறுகிறது. வெறும் ௧.௧ சதவிகிதம் மட்டுமே.இதற்கு இரண்டு பெரும் காரணங்களைக் கூறலாம்.
ஒன்று, இந்திய பழமையையும் பாரம்பரியத்தையும் போற்றுகிற ஒரு நாடு. வரலாற்றுக்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் ஊற்றாகத் திகழும் இந்திய பாரம்பரியத்தின் பல்வேறு பரிமாணங்கள் உலக அறிந்ஜர்களையே வியக்க வைக்கின்றது. அரசாட்சி, விவசாயம், வானியல், மருத்துவம், காதல், வீரம், அரம், நில வகைகள் என வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்வியல் பரிமாணங்களை தாங்கி நிற்பது. எனவே வாழ்வின் அடிப்படை கூறுகளில் எவித பெரிய மாற்றங்களை யும் எளிதாக அனுமதிக்காத சமுகம்.
மற்றொன்று, திருமணம் பந்தம் நீடித்த மற்றும் நிலையான உறவு என மக்கள் ஆழமாக கருதுவதால்தான். விவாகரத்து விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைவாக உள்ளதென்பது நமது உறவுகளின் மீது நாம் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தியாவில் நடக்கும் ஆயிரம் திருமனன்ன்களில் ௧௧ திருமணங்கள் மட்டுமே விவகாரத்தில் முடிகின்றன. அதாவது நூற்றுக்கு ஒரு திருமணம் மட்டுமே விவாகரத்தில் முடிகிறது. இதற்குமுந்தைய கணக்கெடுப்பின்படி ஆயிரத்தில் ௭.௪0 திருமணங்கள் மட்டுமே விவாகரத்தில் முடிந்தன.
ஆனால் விவாகரத்து ஒன்றை வைத்து மட்டுமே மன வாழ்வின் தன்மையை கணக்கிட்டுவிட முடியாது. மன வாழ்வு தனிநபர் ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே மைய்யப்படுதியதல்ல. மாறாக குறைகளுள்ள இரு நபர்களின் மனப்பூர்வமான ஒன்றிணைப்பையும் அதன் விளைவாக விளையும் என நாம் நம்பும் அத்தனை நம்பிக்கைகளையும், வாழ்வியல் பார்வைகளையும் உள்ளடக்கியது.
Palar manavaazhvai thatham thanimaiyai pokkum nivaaranamaagavum, veru silar kudumbachoththai perukkum vazhiyaagavum, innum silar pana varavukkaana atchchaya paaththiramaagavum paarkiraargal. Vegu silaraalaeye manavaazhvai pagirthalukkaana thalamaagavum, purithalukku vazhi vagukkum paathaiyaagavum inaindhu nadathum vizhmiya vaazhvaagavum paarkamudigirathu.
Muzhumaiyaana indha uravup parimaatrathirku mana vaazhkkai patriya sariyaana paarvai migavum avasiyamaagirathu. Manavaazhvin ilakkugalai maru aayvu seithu pothu nalanaiyum samooga nalanaiyum mayyappaduthiya vaazhviyal thittangalai theettuvadhanaal mattume ivvaazhvin muzhuppalanai adiyamudiyum enbathil sandhegamillai.
Idhaiye thiruvalluvar ….enak koorugiraar.
Manavaazhvin paathai puriyavillai aluthuk kolvorukku naam solla vendiya vaarthaigal ivai: “paarvaiyai maatrungal paathai nangu theriyum.”
Gulorius steve
aasiriyar

ஆலயமுற்றம்

இட ஒதுக்கீடு பெறுபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பெறாதவர்கள் அதிகம் அவதியுறுகிறார்கள் என்ற கருத்து சிலரிடையே இருந்து வருகிறது. இது தவறு. ஏனேன்றால் உண்மையில் அவதியுர்ம் அனைவருக்கும் இடஒதுகீடு அவரவர் தேவைக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது. நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு பெறத் தகிதியுடையவர்களிடைஎயும் சிலர் போதிய பணம் படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அத்தகைய ஒதுக்கீடு தேவையில்லை. அவ்வாறே இட ஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்களாக இருப்பினும் போதிய அடிப்படை வசதிகளும் வாபுகளும் இல்லாதவர்க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மாற்றம் மக்களிடையே வரும். பணமும் பொருளும் இருப்பவர்கள் பலர் இச்சலுகைகளை பயன்படுத்தி முன்னேறுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். அத்தகைய மக்களுக்கும் பொறுப்பற்ற தனத்தால் முன்னேறாமல் கிடக்கும் மக்களுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும். நாம் நமக்கென வகுக்கும் சட்டங்களையும் திருத்தி பின்பற்றுகிற மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும். இந்தக் கூற்று இட ஒதுகீட்டிற்கு மட்டுமல்ல மாறாக சமுகத்தின் பிற எல்லா சட்டவகைகளுக்கும் பொருந்தும். வெறுமெனே சட்டத்தை சட்டத்துக்காக பின்பற்றுவது கறிக்குதவாத ஏட்டுசுரக்க்காயதான்.

பால்ராஜ்
திருச்சி

Tuesday, July 29, 2008

ஆலய முற்றம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் சில ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். "திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே," என திறமையை வளர்ப்பதற்கான கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். எனவே திறமையை பொறுத்து கல்வி இருக்ககூடாது. மாறாக திறமைக்கான கல்வியை கொடுக்க வேண்டும்.
மற்றுமொரு பாடலில்இருகிரதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்கிற வெளியும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது ." என பகிர்வு முறையாக இருந்தால் இட ஒதுக்கீடுக்கு இடமேயில்லை. ஆனால் சிலர் மட்டும் தேவைக்கும் அதிகமான பணத்தையும், பொருளையும் தங்களுக்கு மட்டும் என பதுக்கி வைப்பதால் இட ஒதுக்கீடு என ஒன்று நிச்சயம் தேவைப்படும். கல்வி பற்றியும், சொத்துப் பகிர்வு பற்றியும் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கு யாரும் தயராக இல்லை என்பதே உண்மை. திருச்சபையும் இதற்க்கு விதி விலக்கல்ல. அடிப்படையிலேயே சமத்துவம் நிறைந்த சமுகத்தை படையதால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

சகாயராஜ்
சேலம்

தலையங்கம் செய்தி மலர் ஆகஸ்ட்

இந்தியா பல்வேறு காரணங்களுக்காக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. அமைதி, ஆன்மிகம், மதம், வாழ்க்கை நெறிமுறைகள், பாரம்பரியம் என பல்வேறு காரணங்களுக்காக பலராலும் மதிக்கப்படுகிறது. மற்றுமொரு ஆச்சர்யமான செய்தி என்னவெனில் மனித உறவுகளுக்கும இந்தியா பெயர் பெற்றிருக்கிறது. ஆச்சர்யம் ஆனால் அது உண்மை. அதுதான் உலக விவாகரத்து விகிதத்தில் இந்தியாவின் பங்கு ௧.௧ பெற்று இறுதி நிலை வகிப்பது.

விவாகரத்து அதிகம் செய்யும் நாடுகளில் சுவீடன் நாடு முதலிடம் வகிக்கிறது. உலக விவாகரத்தில் சுவீடன் ௫௪.௯ சதவிகித விவாகரத்து ச்வீடேனில் நடக்கிறது. மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைந்த விவாகரத்து நடை பெறுகிறது. வெறும் ௧.௧ சதவிகிதம் மட்டுமே.

இதற்கு பல்வேறு காரங்கள் உண்டு. ஒன்று, இந்திய பழமையையும் பாரம்பரியத்தையும் போற்றுகிற ஒரு நாடு. மற்றொன்று, திருமணம் பந்தம் நீடித்த மற்றும் நிலையான உறவு என மக்கள் ஆழமாக கருதுவதால்தான்.

விவாகரத்து விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைவாக உள்ளதென்பது நமது உறவுகளின் மீது நாம் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தியாவில் நடக்கும் ஆயிரம் திருமனன்ன்களில் ௧௧ திருமணங்கள் மட்டுமே விவகாரத்தில் முடிகின்றன. அதாவது நூற்றுக்கு ஒரு திருமணம் மட்டுமே விவாகரத்தில் முடிகிறது. இதற்குமுந்தைய கணக்கெடுப்பின்படி ஆயிரத்தில் ௭.௪0 திருமணங்கள் மட்டுமே விவாகரத்தில் முடிந்தன.

Monday, July 28, 2008

செப்டம்பர் மாதம் - விவிலிய புதிர் பதில் ஆகஸ்ட் 2008

(கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்)
கே : ௧. வாக்குறுதிகள் யார் யாருக்கு தரப்பட்டன?
ப : வாக்குறுதிகள் ஆபிரகாமிற்கும், அவரது வழி மரபினருக்கும் தரப்பட்டன. (3 : 16 )
கே : ௨. அரேபியாவிலுள்ள சீன மலை எதற்கு அடையாளம்?
ப : இப்போதுள்ள எருசலேமுக்கு அடையாளம். ( 4 : 25 )
கே: ௩. யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?
ப : பேதுரு ( 2 : 7 )
கே : ௪. மறைநூல் எந்த நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது?
ப : உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெரும். ( 3 : 7 )
கே : ௫. ஊனியல்பின் இச்சை யாருக்கு முரணானது?
ப : தூய ஆவிக்கு முரணானது.
கே : ௬. என் உடலில் உள்ள தழும்புகள் எதற்கு அடையாளம்?
ப : நான் இயேசுவின் அடிமை என்பதற்கு அடையாளம். (6 : 17)
கே : ௭. நாம் சிறுவர்களாய் இருந்தபோது எதற்கு அடிமைப்பட்டிருந்தோம்?
ப : உலகின் பஞ்சபூதங்களுக்கு ( 4 : 3 )
கே : ௮. விருத்த சேதனத்தைப்பற்றிய பேச்சு ஏன் எழுந்தது?
ப : திருட்டுத்தனமாய் நுழைந்த போலி சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் (2 : 4 )
கே : ௯. யார் வருவதற்கு முன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்?
ப : யாக்கோபின் ஆட்கள் சிலர் வருமுன் ( 3 : 12 )
கே : ௧0. விருத்த சேதனம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டயப்படுதுகிறவர்கள் யார்?
ப : உலகின்முன் நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்களே ( 6 : 12 )

விவிலிய புதிர் கேள்வி - ஆகஸ்ட் 2008

(கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்)
௧. வாக்குறுதிகள் யார் யாருக்கு தரப்பட்டன?
௨. அரேபியாவிலுள்ள சீன மலை எதற்கு அடையாளம்?
௩. யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?
௪. மறைநூல் எந்த நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது?
௫. ஊனியல்பின் இச்சை யாருக்கு முரணானது?
௬. என் உடலில் உள்ள தழும்புகள் எதற்கு அடையாளம்?
௭. நாம் சிறுவர்களாய் இருந்தபோது எதற்கு அடிமைப்பட்டிருந்தோம்?
௮. விருத்த சேதனத்தைப்பற்றிய பேச்சு ஏன் எழுந்தது?
௯. யார் வருவதற்கு முன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்?
௧0. விருத்த சேதனம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டாயப் படுத்துபவர்கள் யார்?

உங்கள் தராசு

"தவறிய குழந்தைகள் தடுமாறும் குடும்பங்கள்" தலைப்புக் கட்டுரை எக்ஸ்துதிய தலிதவிற்கு பாராட்டுக்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து அவர்களை நல்வழியில் நடக்க சிறு வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும். "வாழ்கையின் வரவு செலவு" எழுதிய திறேசயா பவுலோஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள். "உடல் ஆரோகியம்"கட்டுரை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நாமும் எப்படி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எனத் தெரிந்து கொள்ளலாம். மற்றும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பத்து பொன்னான விதிகளை அளித்ததற்கு நன்றி. அருளாளர் அல்போன்சா, லயோலா இந்யாசியர் தொமினிக் சாவியோ தொடர்கட்டுரை, கோபத்தைக் கட்டுப்படுத்திய தந்தை அனைத்தும் அருமையாக அமைந்துள்ளன. தொழு நாய் அறித்துதின்று கொண்டிருந்த அந்த மக்களுக்காகவே இரவும் பகலும் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்தா அருட்தந்தை டமியனுக்குப் புனிதர் பட்டம் கிடைக்க ஜெயிப்போம். திருமதி. ஒபிலியா தாமஸ் கொரேரா.

உங்கள் தராசு

திருத்தங்கள் விவிலியப் புதிர்

௯. ஒரு பெண் தன் தலைமுடியை மழிதுக்கொண்டோ அல்லது மூடிகொண்டோ / மறைதுக்கொண்டோ வழிபட வேண்டும்

௨. ஏவாபாம்பின் சூழ்ச்சியால் ஈமற்றப்பட்டதோடு ஒப்பிடுகிறார்

விவிலியப் புதிர் ஆகஸ்ட்

சென்ற மாத விடைகள்
௧. நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு
௨. பாம்புடன் ஒப்பிடுகிறார்
௩. நேர்மை,உண்மை
. சாட்டையால் அடித்து
௫. பாவம்
௬. மனைவி கணவனிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது
௭. உடல்
௮. ஆண்டவரே வருக
௯. பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்
௧0. காண்பவை

உங்கள் தராசு

சலேசிய துறவிகளின் சேவை , இளைஞ்ர் மற்றும் சேரி வாழ் மக்களின் மருவாழ்வுக்கு அற்பனிக்கப்பட்டது. நாங்கள் முத்துக்குளி துறைமுகத்தை சேர்தவர்கள். எங்கள் ஊரில் எல்லா இளைன்யர்களும் சூதாட்டம், சினிமா குடிப்பழக்கம், தவறான பாலுறவு தொடர்பு என்று காட்டுமிராண்டித்தனம் வாழ்ந்து வருகிறோம் நாங்கள் எங்கள் ஊரில் உங்கள் சபையை நிறுவி செவைசெய்யவும், ஆண்டுதோறும் உங்கள் சபைக்கு இளைன்யர் இளம் பெண்களை தேர்வு செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாதமும் சலேசியன் இதழைப்படிக்க ஆவலாக உள்ளது.

வலன்
மணப்பாடு, தூத்துக்குடி

ஜூலை இதழில் இடம் பெற்ற முத்து அவர்கள் எழுதிய "எண்ணம் போல் வாழ்வு" நம் எண்ணங்கள் எப்போதும் உயர்ந்த எண்ணங்களாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியது. ஓராண்டு இவ்விதழின் ஆசிரியராக பணியாற்றி பாராட்டுக்கள் பெற்ற அருட்திரு செல்வநாதன் அடிகளாருக்கு எனது பாராட்டுக்கள். அவர் பெயர் வாசகர் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை. புதிய ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

சேவியர் கோம்ஸ்
தூத்துக்குடி

Wednesday, July 23, 2008

Welcome to the world of writers

Most welcome to this blog where the writers of Arumbu can post their articles in the coloumn to post comments. There is a possibility of writing in Tamil with the help of unicode language in tamil.
Wishing you all the best.

Affly
Fr. Glorious Steve