Wednesday, August 6, 2008
puligal seithi naalai varum
அழிந்து வரும் புலியினம்
Wednesday, July 30, 2008
வத்திகான் செய்திகள்
1986 -ன்உலக இளையோர் தினத்தை தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இளையோர் ஒன்றுகூடி கிறிஸ்துவின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தவும், அவரைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறார்கள் என சிலுவை வடிவில் நின்று கொண்டு தனது உரையை கேட்டுக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா கடற்படை, தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்களிடம் திருத்தந்தை கூறினார்.
அங்கு புனிதப்பயனதிர்க்காக வந்திருந்தவர்கள் இறைவார்த்தையை கேட்க ஆவல் கொள்பவர்கள் திரும்பிச்செல்லும்போது தங்கள் மனதைத்தொட்ட உயர்ந்த இலட்சியங்களைக்கொண்ட நிகழ்வுகளில் பங்கெடுப்பவர்கள் தனது செய்தியால் பழங்குடியின மக்களோடு நல்ல உறவை வளர்க்க முயல்வதற்காக திருத்தந்தை ஆஸ்திரேலியா அரசைப்பாராட்டினர்.
வத்திகான் செய்திகள்
பக்தர்களுடைய வழிபாட்டை எளிதாக்குவதற்க்காக வணக்கத்திற்குரிய ஹென்றி நியூமன்னுடைய உடலை மீண்டும் தோண்டிஎடுக்குமாறு இங்கிலாந்து திருச்சபைக்கு வத்திகான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்து திருச்சபையிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனமாறிய ஹென்றி நியூமன்னுடைய அருளாளர் பட்டம் அருகில் வரவிருப்பதால் இதற்கு திருச்சபை ஏற்பாடு செய்துள்ளது. நியூமன்னுடைய உடல் ரேட்னால் என்ற இடத்தில் 1890 - இல் புதைக்கப்பட்டது. தி டெலிகிராப் கொடுத்த தகவலின்படி, ஹென்றி நியூமன்னுடைய உடல் பர்மிங்ஹாம் ஆரட்டரியிலுள்ள அழகிய பளிங்கு கற்களால் ஆனகட்டிடத்தில் வைக்கப்போவதாக கூறப்படுகிறது. தனது மனமாற்றத்திற்கு பிறகு, பர்மிங்ஹாம் ஆரட்டரியை நிறுவினார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ பதினைந்தாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
உலக இளையோர் தின திருப்பலி
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத கூட்டம்
உலக இளையோர் தின விழாவின் (15 - 20 ) இறுதி திருப்பலியானது, எண்ணிலடங்கா குறிப்பிடத்தக்க சிறப்புகளை உள்ளடக்கி நிறைவுற்றது. ஆரம்பம் முதல் இறுதி வரை அதன் சிறப்பு என்னவென்றால், ஆஸ்ற்றலியாவரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு மக்கள் திரளாக வந்திருந்தனர்.
இந்தத்திருப்பலியானது, ஆஸ்திரேலியா வரலாற்றில் சிறந்த மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்திருப்பளியில் 26 கர்தினால்களும், 420 ஆயர்களும், ஆயிரத்திற்கும் மேலான குருக்கள் மற்றும் துறவற சபையினரும் கலந்துகொண்டனர்.
மற்றுமொரு வியத்தகு சம்பவம் என்னவென்றால், இந்நிகழ்ச்சியில் 24 உறுதி பூசுதல் வழங்கப்பட்டது. இதில், 14 ஆஸ்திரேலியர்கள் மற்றும் அமெரிக்காவிலிருந்து யுவான் மர்த்தினசும் அடங்குவர். மேலும், 1300 குருக்கள் மற்றும் சகோதரர்கள் கலந்து கொண்ட இத்திருப்பளியின்போது இயேசுவின் திருவுடல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தலையங்கம் சலேசியன்
Thalaiyangam
இந்தியா பல்வேறு காரணங்களுக்காக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. அமைதி, ஆன்மிகம், மதம், வாழ்க்கை நெறிமுறைகள், பாரம்பரியம் என பல்வேறு காரணங்களுக்காக பலராலும் மதிக்கப்படுகிறது. மற்றுமொரு ஆச்சர்யமான செய்தி என்னவெனில் மனித உறவுகளுக்கும இந்தியா பெயர் பெற்றிருக்கிறது. ஆச்சர்யம் ஆனால் அது உண்மை. உலக விவாகரத்து விகிதத்தில்
விவாகரத்து அதிகம் செய்யும் நாடுகளில் சுவீடன் நாடு முதலிடம் வகிக்கிறது. உலக விவாகரத்தில் ௫௪.௯ சதவிகித விவாகரத்து ச்வீடேனில் நடக்கிறது. மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைந்த விவாகரத்து நடை பெறுகிறது. வெறும் ௧.௧ சதவிகிதம் மட்டுமே.இதற்கு இரண்டு பெரும் காரணங்களைக் கூறலாம்.
ஒன்று, இந்திய பழமையையும் பாரம்பரியத்தையும் போற்றுகிற ஒரு நாடு. வரலாற்றுக்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் ஊற்றாகத் திகழும் இந்திய பாரம்பரியத்தின் பல்வேறு பரிமாணங்கள் உலக அறிந்ஜர்களையே வியக்க வைக்கின்றது. அரசாட்சி, விவசாயம், வானியல், மருத்துவம், காதல், வீரம், அரம், நில வகைகள் என வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்வியல் பரிமாணங்களை தாங்கி நிற்பது. எனவே வாழ்வின் அடிப்படை கூறுகளில் எவித பெரிய மாற்றங்களை யும் எளிதாக அனுமதிக்காத சமுகம்.
மற்றொன்று, திருமணம் பந்தம் நீடித்த மற்றும் நிலையான உறவு என மக்கள் ஆழமாக கருதுவதால்தான். விவாகரத்து விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைவாக உள்ளதென்பது நமது உறவுகளின் மீது நாம் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தியாவில் நடக்கும் ஆயிரம் திருமனன்ன்களில் ௧௧ திருமணங்கள் மட்டுமே விவகாரத்தில் முடிகின்றன. அதாவது நூற்றுக்கு ஒரு திருமணம் மட்டுமே விவாகரத்தில் முடிகிறது. இதற்குமுந்தைய கணக்கெடுப்பின்படி ஆயிரத்தில் ௭.௪0 திருமணங்கள் மட்டுமே விவாகரத்தில் முடிந்தன.
ஆனால் விவாகரத்து ஒன்றை வைத்து மட்டுமே மன வாழ்வின் தன்மையை கணக்கிட்டுவிட முடியாது. மன வாழ்வு தனிநபர் ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே மைய்யப்படுதியதல்ல. மாறாக குறைகளுள்ள இரு நபர்களின் மனப்பூர்வமான ஒன்றிணைப்பையும் அதன் விளைவாக விளையும் என நாம் நம்பும் அத்தனை நம்பிக்கைகளையும், வாழ்வியல் பார்வைகளையும் உள்ளடக்கியது.
Palar manavaazhvai thatham thanimaiyai pokkum nivaaranamaagavum, veru silar kudumbachoththai perukkum vazhiyaagavum, innum silar pana varavukkaana atchchaya paaththiramaagavum paarkiraargal. Vegu silaraalaeye manavaazhvai pagirthalukkaana thalamaagavum, purithalukku vazhi vagukkum paathaiyaagavum inaindhu nadathum vizhmiya vaazhvaagavum paarkamudigirathu.
Muzhumaiyaana indha uravup parimaatrathirku mana vaazhkkai patriya sariyaana paarvai migavum avasiyamaagirathu. Manavaazhvin ilakkugalai maru aayvu seithu pothu nalanaiyum samooga nalanaiyum mayyappaduthiya vaazhviyal thittangalai theettuvadhanaal mattume ivvaazhvin muzhuppalanai adiyamudiyum enbathil sandhegamillai.
Idhaiye thiruvalluvar ….enak koorugiraar.
Manavaazhvin paathai puriyavillai aluthuk kolvorukku naam solla vendiya vaarthaigal ivai: “paarvaiyai maatrungal paathai nangu theriyum.”
Gulorius steve
aasiriyar
ஆலயமுற்றம்
பால்ராஜ்
திருச்சி
Tuesday, July 29, 2008
ஆலய முற்றம்
மற்றுமொரு பாடலில்இருகிரதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்கிற வெளியும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது ." என பகிர்வு முறையாக இருந்தால் இட ஒதுக்கீடுக்கு இடமேயில்லை. ஆனால் சிலர் மட்டும் தேவைக்கும் அதிகமான பணத்தையும், பொருளையும் தங்களுக்கு மட்டும் என பதுக்கி வைப்பதால் இட ஒதுக்கீடு என ஒன்று நிச்சயம் தேவைப்படும். கல்வி பற்றியும், சொத்துப் பகிர்வு பற்றியும் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கு யாரும் தயராக இல்லை என்பதே உண்மை. திருச்சபையும் இதற்க்கு விதி விலக்கல்ல. அடிப்படையிலேயே சமத்துவம் நிறைந்த சமுகத்தை படையதால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
சகாயராஜ்
சேலம்